சேரன்மகாதேவியைச் சேர்ந்த76 வயது முதியவர், கோவில்பட்டியைச் சேர்ந்த 42 வயது பெண், புளியங்குடியைச் சேர்ந்த 2 பெண்கள் ஆகியோர், கரோனாபாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உறவினர்கள் கோரிக்கையை ஏற்று, இவர்களின் உடல்களை, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் பீர் மஸ்தான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தன்னார்வ மீட்புக்குழுவினர் பெற்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், இறந்தவரின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்தனர்.