பாளையங்கோட்டை காந்திமதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கரோனா பரிசோதனை மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணி நடைபெறுகிறது.
இதனை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார். இங்கு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்து, நோயின் தன்மைக்கேற்ப அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா பாதுகாப்பு மையம் ஆகியவற்றில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.