தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். 
Regional03

40 போலீஸாருக்கு எஸ்பி பாராட்டு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் காவல் துறையினரை வாரம்தோறும் தேர்வு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றியதாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தாளமுத்துநகர் ஆய்வாளர் ஜெயந்தி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, ஆழ்வார்திருநகரி ஆய்வாளர் ஜூடி, தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) முருகன் ஆகியோரும் அடங்குவர். இவர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT