Regional02

கரோனாவுக்கு இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கரோனா இருப்பது கடந்த 24-ம் தேதி உறுதியானது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் 1-ம் தேதி இரவு உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 445 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 536 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 15 ஆயிரத்து 892 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT