மத்திய அரசின் தொழிலாளர் துணை தலைமை ஆணையராகப் பதவி வகித்து வந்த வி.முத்து மாணிக்கம், கடந்த மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தொழிலாளர் துறையின் பிராந்திய தலைவராக இருந்தார்.
தனது 3 ஆண்டு பதவிக் காலத்தில், மிகச் சிறப்பாகப் பணியாற்றி, தொழிலாளர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நிவாரணம் வழங்கியதற்காக, சிறப்பு விருது பெற்றுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றியதற்காக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வரால் கவுரவிக்கப்பட்டார்.
மேலும், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டார பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் 6 ஆயிரம் பேரின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கு ரூ.32 கோடி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இவர் இதற்கு முன் கர்நாடகா, மகாராஷ்டிரா, அந்தமான், லட்சத் தீவில் பணியாற்றியுள்ளார்.