தாரமங்கலம் அருகே சிறுமியை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தாரமங்கலம் அடுத்த தெசவிளக்கு கீழ்மட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பூவான்வளவு பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் மகன் தனபால் (20), சிறுமியிடம், நுங்கு வெட்டிதருவதாக கூறி அருகே உள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி யடைந்த சிறுமி கூச்சலிடவே தனபால் சிறுமியை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தப்ப முயன்ற தனபாலை பிடித்து தாரமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி தனபாலை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி, சிறையில் அடைத்தனர்.