ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சி மற்றும் மாற்றுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. அவற்றை வாகனங்களில் இருந்து இறக்கி பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லும் ஊழியர்கள். படம்: எஸ். குரு பிரசாத் 
Regional02

ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சிக்காக வைக்கப்பட்ட - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் வந்தன :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலின்போது தொகுதி வாரியாக பயிற்சி மற்றும் மாற்றுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவை மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்கும் பயிற்சி மற்றும் மாற்று தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங் கள் உள்ளிட்டவைகள் அந்தந்த தொகுதிகளில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் சேலம் ஆட்சியர் அலுவலகபாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டன. அவை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “ சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் இருந்தும் மொத்தமாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,535, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,067, விவிபாட் இயந்திரங்கள் 1,608 ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன” என்றனர்.

SCROLL FOR NEXT