Regional01

துறையூர் அருகே - லாரி ஓட்டுநர் வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் பாஸ்கரன் (54). லாரி ஓட்டுநர். இவரது மனைவி தனலட்சுமி. நேற்று முன்தினம் இரவு பாஸ்கரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு காற்றோட்டத்துக்காக முன்புற வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 3.30 மணி யளவில் பாஸ்கர் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில் துறையூர் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT