Regional03

தீயணைப்பு மீட்புக் குழுவினர் செயல்விளக்கம் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் டான்பாஸ்கோ பள்ளியில் நேற்று நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் செயல்விளக்கப் பயிற்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம்.மனோ பிரசன்னா தலைமை வகித்தார்.

உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் உ.திலக், ஜூனியர் ரெட்கிராஸ் செயலாளர் முத்துக்குமார், பள்ளித் தாளாளர் தாமஸ் லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மருத்துவமனைகளில் கரோனா வார்டில் ஆக்சிஜன் கசிவு, மின்கசிவு உள்ளிட்டவை நேரிட்டால், அதிலிருந்து நோயாளிகளை பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு பத்திரமாக மீட்டு, வெளியேற்றுவது குறித்து வீடியோ படம் காண்பிக்கப்பட்டு, பின்னர் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொறுப்பாளர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT