சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு அளிக்க, நீதிமன்ற வளாகத்தில் அட்டை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று நீதிமன்ற பணியாளர் மகேந்திரன் பார்க்க சென்றபோது, பெட்டியில் நான்கு அடி நீள சாரைப் பாம்பு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, பாம்பை பிடித்நு பாதுகாப்பான முறையில் வனப்பகுதியில் விட்டனர்.
பாம்புகள் அடிக்கடி நீதிமன்றத்துக்குள் வருவதால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.