நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் மூலிகை நாற்றுகளைப் பெறு வதற்காக, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்து வரு கின்றனர்.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விடுபட பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்படுகின்றன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் பகிரப்படுவதால், இத்தகைய மூலிகைச் செடிகள் மீது பொதுமக்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகையசெடிகளை வாங்கிச் சென்று வளர்ப்ப தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்அறிவியல் நிலைய வளாகத்தில்மாதிரி மூலிகை நாற்றுப் பண்ணைஅமைக்கப் பட்டுள்ளது. இங்கு ஆடாதொடை, கற்பூரவள்ளி, நிலவேம்பு, நெல்லிக் காய், தூதுவளை, துளசி என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை நாற்றுகள் தயார்செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஈரோடு, அந்தியூர், அறச்சலூர், பள்ளி பாளையம், கோபி உள்ளிட்ட பகுதியில் இருந்து, மூலிகை நாற்றுகள் கேட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனத்தினர் மூலிகை நாற்றுகளைப் பெறுவதற் காக முன்பதிவு செய்து வருவதாக வேளாண் நிலையத்தினர் தெரி வித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட அளவில் 10 இடங்களில் மாதிரி மூலிகைத் தோட்டம் அமைக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், கோபி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது, என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.