கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரண்டு கட்டமாகதடுப்பூசி முகாம் நடந்தது. முதல்கட்டமாக ஏப்ரல் 12-ம் தேதி நடந்தமுகாமில் 326 பணியாளர் களுக்கும், 2-வதாக நடந்த முகாமில் 178 பணியாளர்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
முகாமிற்கு சக்திமசாலா நிறுவனத்தின் நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி, கரோனா இரண்டாவது அலை பரவல் குறித்தும், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.
மருத்துவ அலுவலர் சூர்ய பிரபா மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஈரோடு தன்வந்திரி பல்நோக்கு மருத்துவமனையின் செவிலியர் கள், சக்தி மருத்துவ மனைப் பணியாளர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சக்தி மசாலா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.