Regional02

நெல்லையில் இறைச்சி, மீன் கடைகள் மூடல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் பேர் மாநகரில் உள்ளனர். இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.

அதன்படி திருநெல்வேலியில் இறைச்சி, மீன் கடைகள் நேற்று மூடப்பட்டன. இதுகுறித்து தெரியாமல் இறைச்சி கடைகளுக்கு வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சில வியாபாரிகள் தங்களது வழக்கமான வாடிக்கை யாளர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் வகைகளை ஆர்டரின்பேரில் வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்கினர்.

இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டதை சுகாதார ஆய்வாளர் கள் கண்காணித்தனர்.

SCROLL FOR NEXT