Regional01

வாக்கு எண்ணிக்கை மையங்களில் - கரோனா தடுப்பு வழிமுறைகள் முழு அளவில் பின்பற்றப்படும் : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சி யர் எஸ். திவ்யதர்ஷினி தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதி களுக்கு ஜமால் முகமது கல்லூரி யிலும், மணப்பாறை, ரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளுக்கு பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், துறையூர் மற்றும் முசிறி தொகுதிகளுக்கு துறையூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும் மே 2(இன்று) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 4 மேசைகள் போடப்பட்டுள்ளன.

இப்பணியில், திருச்சி மாவட்டத் தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர் கள் மற்றும் காவல்துறையினர் ஏறத்தாழ 3,562 பேரும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஏறத்தாழ 2,352 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

அஞ்சல் வாக்கு எண்ணிக்கை மே 2(இன்று) காலை 8 மணிக்கு தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் மின்னணு தகவல் பலகையில் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கரோனா தொற்று தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் முழுமை யாக கடைபிடிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அனைவருக் கும் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, 98.6 ஃபாரன்ஹீட் அளவுக்குள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT