மேலகல்கண்டார்கோட்டை - கிழக்குறிச்சி இடையேயான சாலையில் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பங்கள். 
Regional01

கிழக்குறிச்சி சாலையில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணி : விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை- கிழக்குறிச்சி இடையே யான தார் சாலையை 7.5 மீ அகலத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் மாநில நெடுஞ் சாலைத்துறை மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளின்போது ஏற்கெனவே சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்களை அகற்றி, ஓரமான இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டு, அதன்பின் சாலையை விரிவாக்கம் செய்ய முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறு செய்யாமல், மின் கம்பங்களை அதே இடத்திலேயே வைத்துவிட்டு சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘மின் கம்பங்களை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டு அவசரம், அவசரமாக சாலை அமைக்கின்றனர். இந்த சாலையில் தெரு விளக்கு வசதியும் இல்லை. எனவே, இரவு நேரங்களில் இவ்வழியாக வாகனங்களில் வரக்கூடியவர்கள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT