Regional01

டாஸ்மாக் கடையில் தீ விபத்து :

செய்திப்பிரிவு

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தொழிலாளர் தினத்தை முன் னிட்டு அனைத்து டாஸ்மாக் கடை களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் அண்ணாமலை நகரிலுள்ள ஒரு மதுபான கடையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்த கன்டோன் மென்ட் நிலைய தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் டாஸ்மாக் கடைக்குள் இருந்த பொருட்கள், மதுபாட்டில்கள் பெருமளவில் சேதமடைந்தன.

இதுகுறித்து உறையூர் போலீ ஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவு கார ணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. சேதமடைந்த பொருட் கள் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT