திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த மதகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் அய்யப்பன்(24). இவர் கோவையில் வேலை பார்த்தபோது, அங்கு வேலை செய்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியின் ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்த அய்யப்பன், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.