திருச்சி மேலகல்கண்டார் கோட்டை சோமசுந்தரம் நகரைச் சேர்ந்த எம்.பிரவின்(27), பொன்மலை கணேசபுரத்தைச் சேர்ந்த எம்.சண்முகம்(24), கும்பகோணம் மேலக்காவேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த கே.கவுதம்(25), வேலாக்குடி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஜி.அஜித்குமார்(25) ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கும்பகோணம் கிழக்கு போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில், ஆட்சியர் ம.கோவிந்தராவ் கடந்த ஏப்.29-ம் தேதி உத்தர விட்டார்.
இதன்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டனர்.