Regional01

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி சகுந்தலாதேவி சுரண்டை காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த முத்துக்குமார், கரோனா பரவல் காரணமாக ஊருக்கு திரும்பினார். சுரண்டை வடக்கு புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், குலையநேரி அருகே இருசக்கர வாகனத்தில் முத்துக்குமார் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரண்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT