பாண்டிய மன்னர்களின் துறைமுக தலைநகராக விளங்கியதாக கூறப்படும் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும்அகழாய்வில் சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னர் கொற்கையில் கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது.
இதில், கொற்கை நகரம் 2,800 ஆண்டுகால பழமையானது என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இந்த இடம் விளங்கியதாகவும் அறியப்பட்டது.
சங்கு அறுக்கும் தொழில்
செங்கல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் உள்ளன. இந்தப் பகுதியில் சங்கு அறுக்கும் தொழில் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு குழியில் சங்குகள் முழுமையாகவும், அறுத்த நிலையிலும் உள்ளன. மேலும் அதேகுழியில் சங்குகளை அறுத்த பின்னர் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இதேபோல சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்கு துண்டுகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் என, ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு தமிழ் அறிஞர் கால்டுவெல் இப்பகுதியில் அகழாய்வு செய்தபோது, தெருமுழுவதும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன என எழுதியுள்ளார். தற்போதும் அகழாய்வின்போது நிறைய சங்குகள் கிடைக்கின்றன.
எம்ஜிஆரின் முயற்சி