சீரமைக்கப்படாத பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலை. 
Regional02

ஒப்பந்தகாலம் முடிந்து பல மாதங்களாகியும் - பெருந்துறையில் சாலை புதுப்பிக்கும் பணி நிறைவடையாததால் பயணிகள் பாதிப்பு :

செய்திப்பிரிவு

ஒப்பந்தகாலம் முடிந்து பல மாதங்களாகியும் பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலையை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையாமல் உள்ளதாக ஏஐடியுசி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு, ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி அனுப்பியுள்ள மனு விவரம்:

பெருந்துறை நகர காவல் நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையான பிரதான சாலையையொட்டி, அரசு மருத்துவமனை, காவல் நிலையம், அரசுப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்க ளும், தினசரி மார்க்கெட்டும் அமைந்துள்ளன. பெருந்துறை ரயில் நிலையம் மற்றும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பாதையும் இதனையொட்டி அமைந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இச்சாலையில் தான் சென்று வருகின்றன. இச்சாலையை புதுப் பித்து, சாக்கடை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு மே மாதம் ரூ.4.35 கோடிக்கு, நெடுஞ்சாலைத் துறை மூலம் தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப் பட்டது.

ஒப்பந்தப்படி ஆறுமாத காலத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணிகள் தாமதமாக தொடங்கப் பட்டு, ஆமை வேகத்தில் நடை பெற்று வருகின்றன. இதனால் ஒப்பந்தக் காலம் முடிந்து பல மாதங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

மேலும், இச்சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, இப்பகுதி குடியிருப்பு களுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன. இதனால், பல குடியிருப்புவாசிகள், மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வரு கின்றனர்.

எனவே, சாலை புதுப்பித்தல் மற்றும் சாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT