Regional02

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு :

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும்ஞாயிறு முழு ஊரடங்கின் போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் மற்றும் 34 முக்கிய இடங்களில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகள், சாலையில் நடமாடுவோர், கடையை திறந்து வைத்திருந்த உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20-ம் தேதி இரவு முதல் நேற்று இரவு வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில், நேற்று முன் தினம் இரவு மட்டும்ஈரோடு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு மீறியதாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT