திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
Regional01

நெல்லை ரயில் நிலையத்தில் - பயணிகளுக்கு கரோனா பரிசோதனை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி ரயில் நிலை யத்தில் பயணிகளுக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கரோனா தொற்று பரவலை தடுக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வருபவர்களை சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின், முதுநிலை வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா ஆகியோர் மதுரை கோட்ட எல்கைக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது மாநில சுகாதார அதிகாரிகளை ரயில் நிலையங்களில் பயணிகளை சோதிக்க பணியமர்த்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்படி திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் ரயில்களில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்கிறார்கள். மேலும் கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT