திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

கரோனா தடுப்பு பாதுகாப்பு வசதி செய்து தரக்கோரி - நெல்லையில் முதுகலை மருத்துவ மாணவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவர்கள் பணிகளை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்காத மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து முதல்வர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவசரகால சிகிச்சை தவிர மற்ற பிரிவுகளில் பணியாற்ற போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்றுஅதிகரித்து வருவதின் காரணமாகதிருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுவதும் கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இங்கு 330 முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவர்கள் ஷிப்டு முறையில் பணியமர்த்தப்பட்டு வருகின்ற னர்.

இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தங்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் எதையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளையும் புறக்கணித்தனர்.

கல்லூரி வளாகத்துக்குள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்குவதற்கு தனி ஏற்பாடுகள் இல்லை. அனைவருக்கும் தங்கு மிடம் ,குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உணவு விடுதி வசதிஎல்லாம் பொதுவாக இருப்பதால் கரோனா தோற்று பாதித்த மருத்துவரிடமிருந்து மற்ற மருத்துவர்களுக்கு தொற்று பரவும் அபாயம்நிலவுகிறது என்று முதுநிலை மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.

கரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், சுத்தமான கழிவறை, தங்குதடையற்ற மருந்து சப்ளை, தொடர் பரிசோதனை ஆகியவசதியுடன் கூடிய வார்டு ஒன்றைஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT