Regional01

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கல் :

செய்திப்பிரிவு

சுரண்டை பேரூராட்சியில் 2 முதல் 6-வது வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தலா 5 முகக்கவசங்கள் அடங்கிய தொகுப்பு திமுக சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளர் ஜெய பாலன் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சங்கரநயினார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், தொண்டரணி துணை அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார். சுமார்1,500 வீடுகளுக்கு 7,500 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஜெகதீசன், மாரியப்பன், பிரேம்குமார், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT