Regional01

கரோனா தொற்றுக்கு தலைமை ஆசிரியர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.

காட்பாடி அருகேயுள்ள கீழ்முட்டுக்கூர் ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் தயாளன் (57). இவர், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு, கடந்த திங்கட்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை உயிரிழந்தார். இவருடைய மனைவி உமா, காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும், கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT