திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான 16,31,918 வாக்குகள் 2 மையங்களில் நாளை (2-ம் தேதி) எண்ணப்படவுள்ளன.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,10,359 ஆண்களும், 1,11,442 பெண்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2,21,803 பேர் (80.67 சதவீதம்) வாக்களித்தனர். திருவண்ணா மலை சட்டப்பேரவைத் தொகுதி யில் 1,00,227 ஆண்களும், 1,05,284 பெண்களும், 10 மூன்றாம் பாலினத் தவர்களும் என 2,05,521 பேர்(71.77 சதவீதம்) வாக்களித்தனர்.
கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 98,606 ஆண்களும், 1,02,353 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் என 2,00,959 பேர் (79.40 சதவீதம்) வாக்களித்தனர். கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 95,841 ஆண்களும், 97,655 பெண்களும் என மொத்தம் 1,93,496 பேர் (79.69 சதவீதம்) வாக்களித் துள்ளனர். போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 95,231 ஆண்களும், 98,312 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 1,93,546 பேர் (79.38 சதவீதம்) வாக்களித் துள்ளனர்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,08,477 ஆண்களும், 1,12,051 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,20,531 பேர் (79.88 சதவீதம்) வாக்களித்துள்ளனர். செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 1,06,243 ஆண்களும், 1,05,888 பெண்களும் என மொத்தம் 2,12,131 பேர் (81.67 சதவீதம்) வாக் களித்துள்ளனர். வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதியில் 92,458 ஆண்களும், 91,473 பெண்களும் என மொத்தம் 1,83,931 பேர் (76.47 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியிலும் 10,17,322 ஆண் வாக்காளர்களில் 8,07,442 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 79.37 ஆகும். மேலும், 10,60,026 பெண் வாக்காளர்களில் 8,24,458 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 77.77 ஆகும்.
இதேபோல், 92 மூன்றாம் பாலினத்தவர்களில் 19 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20,77,440 வாக்காளர்களில் 16,31,918 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 78.55 ஆகும்.
முதலில் தபால் வாக்குகள்
இதேபோல், ஆரணி, வந்தவாசி, போளூர் மற்றும் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் எண்ணப் படவுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி நாளை (2-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் 500, 500-ஆக பிரிக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. இதையடுத்து. மின்னணு இயந் திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
20 முதல் 30 சுற்றுகள்
3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
அதன்படி, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அவர்களில், 100-க்கும் மேற் பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு
கொண்டாட்டம் கிடையாது
மேலும், சனிக்கிழமை இரவு (இன்று) 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங் கப்பட்டுள்ளது.