வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. அருகில், தேர்தல் பார்வையாளர்கள் முகமது அப்துல் அசீம், சித்தரஜ்ஜன் குமார், விபுள் உஜ்வால், சத்தியவாணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன் 
Regional03

வேலூர் மாவட்டத்தில் - வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் : முகவர்கள் முழு கவச உடைய அணிய கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா பாதுகாப்பு நடை முறைகள் கட்டாயம் பின்பற்றப் படுவதுடன் முகவர்கள் முழு உடல் கவச உடையை அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே-2-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன. தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி என 3 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

சுற்றுகள் விவரம்

தபால் வாக்குகள்

வேலூர் மாவட்டத்தில் வழங் கப்பட்ட 20,282 தபால் வாக்குகளில் இதுவரை 12 ஆயிரத்து 407 தபால் வாக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது 61.85 சதவீதமாகவும். மீதமுள்ள 7,875 தபால் வாக்குகள் நாளை (மே-2-ம் தேதி) காலை 7.59 மணிக்குள் வந்து சேர வேண்டும். நாளை காலை 8 மணிக்கு பிறகு வரும் தபால் வாக்குகள் எண்ணப்படாது.

காட்பாடி தொகுதியில் 3 ஆயிரத்து 252 தபால் வாக்குகள், வேலூர் தொகுதியில் 2,475, அணைக்கட்டு தொகுதியில் 2,601, கே.வி.குப்பம் தொகுதியில் 2,349, குடியாத்தம் தொகுதியில் 1,730 தபால் வாக்குகள் பெறப் பட்டுள்ளன. இதில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 2,460 தபால் வாக்குகளும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 483 தபால் வாக்குகளும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்ட 6,733 மின்னணு தபால் வாக்குகளில் 1,930 வாக்குகள் வரை பெறப் பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அதிகபட்சமாக 20 முகவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, காட்பாடியில் 390 பேர், வேலூரில் 408 பேர், அணைக்கட்டில் 338 பேர், கே.வி.குப்பத்தில் 260 பேர், குடியாத்தத்தில் 360 பேர் என மொத்தம் 1,756 பேர் முகவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

வாக்கு எண்ணும் மேஜைக்கு அருகில் உள்ள முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வர்கள் வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயிலில் தங்களது செல்போன்களை ஒப்படைக்க வேண்டும்.

கரோனா பாதுகாப்பு

ஏற்கெனவே வேட்பாளர்கள் தரப்பில் இருந்து முகவர்களாக பணியாற்ற உள்ளவர்களின் பட்டியல் கோரப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தவும் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 1,896 பேரில் 1,030 பேர் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்தி யவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் ஒரு தவணை கரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

கரோனா தடுப்பு பணி

முகவர்கள் முழு உடல் கவச உடையை அணிந்துகொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை, முழு கவச உடை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10 எண்ணிக்கையிலான குப்பைத் தொட்டிகள் வழங்கப்படும். மேலும், கரோனா நடைமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கணினி குலுக்கல் முறை

SCROLL FOR NEXT