Regional02

உத்திரமேரூர் புதிய நீதிபதி பொறுப்பேற்பு :

செய்திப்பிரிவு

உத்திரமேரூர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் இருதயராணி. அவர்கடந்த 2020-ம் ஆண்டில் பிப்ரவரி 24-ம்தேதி கடலூர் மாவட்டத்துக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டார். அதன் பிறகு பெரும்புதூர் நீதிபதி தற்காலிகமாக இந்த நீதிமன்ற வழக்குகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.பிரேம்குமார் உத்திரமேரூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT