தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் அக்ரி பரமசிவம். சமூக ஆர்வலரான இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஆவார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட்டதாக, இவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.