Regional02

பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து :

செய்திப்பிரிவு

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு, விமானங்களில் பயன்படுத்தப்படும் 24 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிய டேங்கர் லாரி திருநெல்வேலி மாவட்டம் பணகுடிவழியாகச் சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் மேலதண்டலம் பகுதியை சேர்ந்த பகவான் மகன் ஜெகத்ரட்சகன் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார்.

பணகுடி அருகே அம்பலவாணபுரம் விலக்கில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரிகவிழ்ந்தது. இந்த விபத்தில்ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.பணகுடி போலீஸாரும், வள்ளியூர் தீயணைப்பு படையினரும் அங்குவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT