தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மண்டலத்தில் திருச்சி யில் 403, அரியலூர் 44, கரூர் 138, நாகப்பட்டினம் 265, பெரம் பலூர் 30, புதுக்கோட்டை 102, தஞ்சாவூர் 315, திருவாரூர் 175 என மொத்தம் 1,472 பேருக்கு புதிதாக நேற்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் நேற்று உயிரிழந்தனர்.