Regional02

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள - 6 தொகுதிகளில் வாக்கு எண்ணும் சுற்றுகள் விவரம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் சுற்றுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் 6 தொகுதிகளுக்கும் தனித்தனி அறையில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தொடக்கத்தில் அஞ்சல் வாக்குகளும் அதன்பிறகு, சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

அதன்படி, கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு 20 சுற்றுகளும், விராலிமலை, திருமயம், ஆலங்குடிக்கு தலா 23 சுற்றுகளும், புதுக்கோட்டை, அறந்தாங்கி தொகுதிகளுக்கு தலா 25 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்து, கரோனா இல்லை என்பதற்கான சான்றுடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் மூலம் கரோனா பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT