Regional02

கரோனா தடுப்பு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் :

செய்திப்பிரிவு

கரூர் நகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு நகராட்சி சுகாதாரத் துறை மூலம் ஆய்வு நடத்தி, அபராதம் விதிப்பு, கடைகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கரூர் நகரில் 3,000 சதுர அடிக்கு மேற்பட்ட பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவை நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தன. ஆனால், விதிகளை மீறி திறந்திருந்த மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஜவுளிக் கடை, ஜவஹர் பஜாரில் உள்ள பாத்திரக்கடை, பேன்ஸி ஸ்டோர் ஆகியவற்றுக்கு நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT