Regional01

பள்ளிக்கூடத்தில் திருடிய 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிஎன் புதுக்குடியில் செல்வ பிரகாஷ் என்பவர் தொடக்கப்பள்ளி நடத்திவருகிறார். இவரது பள்ளியில் இருந்த இரும்புக் கதவு உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் செல்வபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் அமல்ராஜ் (27), கருப்பசாமி (33) மற்றும் ரூபன் மகன் விபின் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதுபோல் மேலக்கடைய நல்லூரில் முகைதீன் (80) என்பவரது கோழிப் பண்ணையில் திருடியது தொடர்பாக கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி, அதே பண்ணையில் வேலை பார்க்கும் மாரியப்பன்(42) , வேலுசாமி (44) ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT