TNadu

மர்மமான முறையில் காரில் தீ: முன்னாள் அதிகாரி மரணம் :

செய்திப்பிரிவு

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் குப்புசாமி (75). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மகன், மகள் வெளியூரில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை காரில் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து வீட்டின் அருகே காரை நிறுத்தினார். அப்போது பலத்த சத்தத்துடன் காரின் உட்பகுதியில் தீப்பற்றியது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து பார்த்தனர். அப்போது காரில் அமர்ந்தவாறே உடல் கருகி குப்புசாமி இறந்து கிடந்தார்.

பின்னர் வீடுகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து சந்தேகத்துக்கிடமான மரணம் என போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT