Regional02

சிக்கண்ணா கல்லூரியில் : கரோனா சிகிச்சைக்கு 140 படுக்கைகள் தயார் :

செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 190 படுக்கைகளுடன் கரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வார்டு நிரம்பி வரும் நிலையில், கூடுதலாக கரோனா படுக்கைகள் அமைக்கும் பணியில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

அதன்படி உடுமலை அரசு கலைக் கல்லூரி, அவிநாசி தனியார் கல்லூரி, திருப்பூர் கல்லூரி சாலையிலுள்ள தனியார்மண்டபம் என பல்வேறு இடங்களில், கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 140 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT