இதையடுத்து, அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையில், அவர்கள், கிராண்ட் லைன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், கிருஷ்ணகுமார்(20), சாமுவேல் கிறிஸ்டோபர்(19), சஞ்சய்(19), வடகரையை சேர்ந்த எம்பிஏ மாணவரான தமிழன்(20) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிறுவன் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.