சேலம் நெடுஞ்சாலை நகர் நலக்குழு சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. படம்: எஸ். குரு பிரசாத் 
Regional02

தூய்மைப் பணியாளர்கள் சேலத்தில் கவுரவிப்பு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கும் முக்கியமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சேலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடந்தது.

சேலம் நெடுஞ்சாலை நகர் நலக் குழு சார்பில் நடந்த விழாவின்போதுதூய்மைப் பணியாளர்களின்சேவையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவிக்கப் பட்டது. மேலும், அவர்களுக்கு புத்தாடைகள், முகக் கவசங்கள், கிருமிநாசினி திரவம் உள்ளிட்டவை கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.

இதில், சேலம் நெடுஞ்சாலை நகர் நலக் குழு சங்கத் தலைவர் நாராயணன், டாக்டர் சந்திரமவுலி உள்ளிட்ட பலர் பங்கேற்று தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி பேசினர்.

SCROLL FOR NEXT