கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மூடப்பட்ட ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஈரோடு காந்திஜி சாலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்கள்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் கரோனா பரிசோதனைமையமும், கரோனா தடுப்பூசி போடவும் இடம் ஒதுக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக இம் மருத்துவமனை வளாகத்திற்கு கர்ப்பிணிகள் மட்டுமின்றி, கரோனா பரிசோதனைக் காகவும், தடுப்பூசி போடுவதற்கா கவும் பலரும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இரு கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவர்கள் பெருந்துறை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையும் தற்காலிகமாக மூடப்பட்டது. நோயாளிகள் வேறு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, நேற்று முதல் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கவும், மருத்துவரைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இதே வளாகத்தில் கரோனா பரிசோதனைக்காக வருபவர்களை தனி வழியாகவும், கர்ப்பிணிகள் தனி வழியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவர் கள் கூறும்போது, இம்மருத்துவமனை யில் ஆரம்பம் முதல் சிகிச்சை பெற்ற இரு கர்ப்பிணிகளுக்கு இன்று (29-ம் தேதி) அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.
தற்போது கரோனா பரவலைத் தடுக்க உரிய வழிகாட்டி முறைகளைப் பின்பற்றியுள்ள நிலையில்,இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளோம். அடுத்தடுத்தநாட்களில், கரோனா பாதிப்பில்லாமல் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும், என்றனர்.