Regional02

கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுனில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் இந்த உபகரணங்களை வழங்கினர். மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. மேலும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை கோவை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் அளித்தனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT