Regional02

தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 22-ம் தேதி முத்துமனோ என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாளையங்கோட்டை சிறை அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். முத்துமனோ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். முத்துமனோ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அமைப்பின் மாநிலத் தலைவர் ம.அய்யப்பன், மாநிலப் பொதுச் செயலாளர் கோ.சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT