திருச்சியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திமுக சார்பில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைக்குமாறு கட்சியினருக்கு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி தில்லைநகர் சாஸ்திரி சாலை பகுதியிலுள்ள கே.என்.நேரு அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் ஆகியோர் நேற்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.