Regional01

வீடுவீடாக கரோனா பரிசோதனை : மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் வீடுவீடாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக் கட்சியின்மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் இது இன்னும் தீவிரமாகும் எனத் தெரிகிறது. இறப்போரின் எண்ணிக்கையும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.

நோய் தொற்று குறித்து வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது அவசியம். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, பாதிக்கப்பட்டோரின் உற்றார், உறவினர்கள், அந்த தெருவில் குடியிருப்போர் அனைவரையும் பரிசோதனை செய்வது அவசியம். இதனை கூடுதல் பணியாளர்களை நியமித்து மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டோர் அனைவரையும் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிப்பது அரசின் கடமை. ஆனால் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், நோய் தீவிரமானால் மருத்துவமனை வாருங்கள் எனச் சொல்லப்படுகிறது. இது ஆபத்தான அறிவுரை. இதனால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

குறிப்பாக பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பலராலும் தீவிரத்தன்மையை உணர முடியாது.

மூச்சுத்திணறல் வந்த பிறகே மருத்துவமனையை நாடும் நிலை உள்ளது. எனவே, நோய்த்தொற்றுஉள்ள அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைஅளிக்க வேண்டும். கூடுதல் சிகிச்சை மையங்களை உருவாக்கவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களைகூடுதலாக நியமிக்க வேண்டும்.தடுப்பூசி ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT