TNadu

சேலத்தில் 29-ம் தேதி வரை முதல்வர் முகாம் :

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி 29-ம் தேதி வரை சேலத்தில் தங்கி கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முதல்வர் பழனிசாமி நேற்று காலை 6.05 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார். தொடர்ந்து முதல்வரை சேலத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர்.

வரும் மே 2-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில், சேலம் வந்துள்ள முதல்வர் பழனிசாமி, 29-ம் தேதி வரை சேலத்தில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் வரும் 30-ம் தேதி முதல்வர் சென்னை திரும்ப உள்ளதாகவும் அதிமுகவினர் கூறினர்.

SCROLL FOR NEXT