கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று பெயர் பதிவு செய்துகொண்ட பொதுமக்கள். 
Regional03

3 மருத்துவ பணியாளர்கள் உட்பட - விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 97 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 மருத்துவப் பணி யாளர்கள் உட்பட 97 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.

நாடு முழுவதும் கரோனா இரண் டாவது அலை தீவிரமானதால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சிவகாசி அருகே உள்ள மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவப் பணியாளர்கள், விருதுநகர் மருத் துவமனை மருத்துவப் பணியாளர் ஒருவர் உட்பட நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தடுப்பூசிக்கு முன்பதிவு

நகர் பகுதி அரசு மருத்துவ மனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தினந்தோறும் ஏராள மானோர் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

மேலும், சிலர் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.

தட்டுப்பாடின்றி அனைவருக் கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT