ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் மாப்பிள்ளை விநாயகர் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 
Regional03

3 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலம் : தனியார் அறக்கட்டளை விநியோகம் :

செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலையால் தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, ராஜபாளையத்தில் ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு மாப்பிள்ளை விநாயகர் அறக்கட்டளை சார்பில் இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. டி.எஸ்.பி. நாகசங்கர், மருத்துவ அலுவலர் பாபுஜி, இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர், ஆதரவற்றோர், முன்களப் பணியாளர்கள், ஏழை, எளியோர் என சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT