Regional01

கரோனா தொற்று ஒழிய - திருநங்கையர் கும்மியடித்து வழிபாடு :

செய்திப்பிரிவு

உலக அளவில் கரோனா தொற்று ஒழிந்திட வேண்டி, சேலம் செவ்வாய்பேட்ட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் திருநங்கையர்கள் ஆடி, பாடி , கும்மியடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திருநங்கையர்கள் திராளக கலந்து கொண்டனர். உலக அளவில் கரோனா தொற்று ஒழியவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் வேண்டி பெரியாண்டிச்சி அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி, 108 தேங்காய் உடைத்து, ஆடி, பாடி, கும்மயடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக திருநங்கையர்கள் கூறும்போது, “ஆண்டு தோறும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடக்கும் விழாவில் திருநங்கையர் அனைவரும் பங்கேற்று வழிபாடு நடத்துவோம். கரோனா பரவல் காரணமாக இன்று (நேற்று) கூவாகம் திருவிழா நடைபெறவில்லை.

எனவே, சேலம் செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உலக அளவில் கரோனா தொற்று தீரவும், பொதுமக்கள் ஆரோக்கியத்துடன், இயற்கை வளம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தோம்” என்றனர்.

SCROLL FOR NEXT