Regional02

மே 1, 2-ம் தேதிகளில் - டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை :

செய்திப்பிரிவு

தொழிலாளர் தினம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு, மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உத்தரவின்படி, வரும் 1-ம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் மறுநாள் 2-ம் தேதி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஒட்டல் பார்கள் அனைத்தும் மூட வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT