கரோனா தொற்று ஒழிய வேண்டியும், மக்களின் ஆரோக்கியம் மேம்பட வேண்டியும், சேலம் செவ்வாய்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் திருநங்கையர் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், கும்மியடித்து அம்மனை வழிபட்ட திருநங்கையர்கள். படம்: எஸ். குரு பிரசாத் 
Regional02

கரோனா தொற்று ஒழிய - திருநங்கையர் கும்மியடித்து வழிபாடு :

செய்திப்பிரிவு

உலக அளவில் கரோனா தொற்று ஒழிந்திட வேண்டி, சேலம் செவ்வாய்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் திருநங்கையர்கள் ஆடி, பாடி , கும்மியடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திருநங்கையர்கள் திரளாக கலந்து கொண்டனர். உலக அளவில் கரோனா தொற்று ஒழியவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் வேண்டி பெரியாண்டிச்சி அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி, 108 தேங்காய் உடைத்து, ஆடி, பாடி, கும்மியடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக திருநங்கையர் கள் கூறும்போது, “ஆண்டு தோறும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடக்கும் விழாவில் திருநங்கையர் அனைவரும் பங்கேற்று வழிபாடு நடத்துவோம். கரோனா பரவல் காரணமாக கூவாகம் திருவிழா நடைபெறவில்லை.

எனவே, சேலம் செவ்வாய்ப் பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உலக அளவில் கரோனா தொற்று தீரவும், பொதுமக்கள் ஆரோக்கியத்துடன், இயற்கை வளம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தோம்” என்றனர்.

SCROLL FOR NEXT